ஒருவழியாக கேரளா பயன்படுத்திய சூப்பர் ரூட்டை டெல்லியும் பிடித்து கொண்டுவிட்டது

ஒருவழியாக கேரளா பயன்படுத்திய சூப்பர் ரூட்டை டெல்லியும் பிடித்து கொண்டுவிட்டது


" alt="" aria-hidden="true" />


கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கலாம் என்ற மத்திய அரசின் புது உத்தரவு நாட்டு மக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது. மத்திய அரசு சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.. அதில் ஒன்றுதான் கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..ஆனால் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது... நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என்றும் மத்திய அரசு நிபந்தனை ஒன்றையும் சேர்த்தே அறிவித்துள்ளது. எனினும் கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கலாம் என்ற அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.. லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது என்பதுதான் நடைமுறை பிரச்சனையாக மக்களுக்கு இருந்து வருகிறது! இதற்காக பிரத்யேக மார்க்கெட் பகுதிகள் நகரங்களின் மையங்களில் அமைக்கப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் உள்ளனர்.. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இதுகுறித்து எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்து வந்தாலும் யாரும் சீரியஸ்தன்மை இன்னும் வராமலேயே இருக்கிறது.. இந்நிலையில்தான் மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. இதனால் சமூக விலகல் என்பது மேலும் கேள்விக்குறியாகுமே என்ற கவலை எழுந்த நிலையில்தான் மத்திய அரசு இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் காய்கறி முதல் உணவு வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே சொல்லி வாங்கி கொள்ளலாம்.. இதன்மூலம் ஒரு பெரிய பாரம் மக்களுக்கு குறைவதுடன், சமூக விலகல் குறித்த பயமும் நமக்கு இல்லாமல் இருக்கும்.. இந்த யுக்தியைதான் கேரளா அன்றே கையில் எடுத்தது. அப்போது கேரளாவில் நிறைய பாதிப்பு இருந்தது.. தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் 2வது இடத்தில் இருந்தது.. அப்போதுதான் நிவாரணப் பணிகளுக்காக 20,000 கோடி ரூபாயை அம்மாநில முதல்வர் ஒதுக்கியதுடன் மக்கள் வீடுகளில் முடங்கியே உள்ளதால், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தார்.ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் முயற்சியை கேரளம் மேற்கொண்டது.. இதன்மூலம் ஆன்லைன் மூலம் மக்கள் பொருளை முன்பதிவு செய்து, பொருட்களும் வீடுகளுக்கே சென்றடைந்தது. இதற்காக ஸ்விக்கியையும் முழு அளவில் பயன்படுத்தியது கேரளா. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவது, கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது! இதற்கு மூல காரணமே ஷைலஜா டீச்சர்தான்.. அவரது உத்திதான் இது.. கேரளாவின் சுகாதார நலத்துறை அமைச்சர்தான் ஷைலஜா டீச்சர்.. வூகானில் கொரோனா என்று செய்திகள் வந்தபோதே தன்னுடைய மாநிலத்தை எச்சரிக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றனர்.. அறிவியல் ஆய்வுகள், மனிதநேயம், டெஸ்ட்கள், மருத்துவ சீர்திருத்தம் போன்றவைதான் கொரோனாவை விரட்ட தேவையே தவிர, மூட நம்பிக்கை, உணர்ச்சி வசப்படுதலும் நமக்கு கை கொடுக்காது என்பதை வலியுறுத்தி சொன்னவர் ஷைலஜா டீச்சர்!கேரளாவில் வெற்றி பெற்ற திட்டம் இப்போது நாடு முழுவதும் அமலாகப் போகிறது. மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வெளியில் வராமல் வீட்டிலிருந்தபடியே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள பழக வேண்டும். அது மட்டும்தான் நம்மையும், நம்முடைய நாட்டையும் காக்க உதவும்.