மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
" alt="" aria-hidden="true" />
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமாத்தூர் கொடிமங்கலம் கீழமாத்தூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 75 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஊராட்சிகளின் எல்லைகள் நாலா புரமும் அடைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஊராட்சிகளிலும் இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் யாரும் வெளியில் இருந்தும் உள்ளே வரக்கூடாது என தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
கீழமாத்தூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.